24/04/2025
#Giftson Durai #Lyrics #Tamil Lyrics

Yethanai Porkalam – எத்தனை போர்க்களம்

எத்தனை போர்க்களம் 
வாழ்க்கையில் சந்தித்தேன் 
அத்தனை தோல்விகள் 
தாண்டியும் வென்றிட்டேன்
பேதையாய் இயேசுவை 
வாழ்விலே சந்தித்தேன்
தஞ்சமாய் சிலுவையில் 
நம்பிக்கை வைத்திட்டேன்
புயலும் கடலும் 
என்னை ஓடி போ என்றாலும் 
இயேசுவே நம்பிக்கை 
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் 
வானமே இருண்டாலும் 
நாட்களை சந்திப்பேன் 
நீதிமான் என்பதை 
வாழ்ந்து தான் காண்பிப்பேன் 
நிந்தனை சோர்வுகள் 
எத்தனை வந்தாலும் 
நித்தமாய் உம்மிலே 
சத்தமாய் சொல்லுவேன்
புயலும் கடலும் 
என்னை ஓடி போ என்றாலும் 
யேசுவே நம்பிக்கை 
என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் – 2
Song Description: Tamil Christian Song Lyrics, Yethanai Porkalam, எத்தனை போர்க்களம்.
KeyWords:  Christian Song Lyrics, Giftson Durai, Thoonga Iaravugal, Ethanai Porkkalam.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *