24/04/2025
#Social Site Collections

We Should Pray In The Early Morning – அதிகாலையில் ஜெபிக்க வேண்டும்

ஏன் நீங்கள் அதிகாலையில் ஜெபிக்க வேண்டும்???


அதிகாலை ஜெபங்களினுடைய மிகுந்த முக்கியத்துவங்கள் என்ன?

  காலையில் ஜெபிப்பது மிக முக்கியம் ஏனெனில் பிசாசை சந்திப்பதற்கு முன்னதாக,நீங்கள் தேவனை சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.
  நீங்கள் ஜீவியத்தின் சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கு முன்னதாக, தேவனைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் அநேக ஜனங்களோடு பேசுவதற்கு முன்னதாக, தேவனிடம் பேசுகிறவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் மற்ற ஜனங்களுடன் ஐக்கியம் கொள்வதற்கு முன்னதாக, தேவனுடன் ஐக்கியம் கொள்பவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் எந்தத் தலைப்புச் செய்திகளைக் கேட்பதற்கு முன்னதாக, பரலோகத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்பவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக அமருவதற்கு முன்னதாக,தேவன் முன் அமருகிறவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் மனிதர்கள் முன் மண்டியிடுவதற்கு முன்னதாக,தேவன் முன் மண்டியிடுகிறவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் ஜனங்களைக் கனப்படுத்துவதற்கு முன்னதாக, தேவனைக் கனப்படுத்துகிறவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் ஜனங்கள் மத்தியில் செல்வதற்கு முன்னதாக,அவரது பிரசன்னத்திற்குள்ளாக செல்கிறவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் உங்கள் சரீரத்திற்கு உணவளிப்பதற்கு முன்னதாக,உங்கள் ஆவிக்கு உணவளிப்பவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் மற்ற சிறிய நாமங்களை அழைப்பதற்கு முன்னதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என்று அழைப்பவர்களாக இருப்பீர்கள்.

  நீங்கள் உங்களையே கண்ணாடியில் பார்ப்பதற்கு முன்னதாக, நம்மைப் படைத்தவரைப் பார்ப்பவர்களாக இருப்பீர்கள்.
Description: Social Site Collection, We Should Pray In The Early Morning.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *