24/04/2025
#Alwin Thomas #D - Major #Lyrics #Tamil Lyrics

Vinnappam Ketpavare – விண்ணப்பம் கேட்பவரே

Scale: D Major – 3/4

விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீரை காண்பவரே

ஜெபம் கேளும் பதில் தாரும்
                      – விண்ணப்பம்

ஜெப ஆவி என் வாழ்வில்
ஊற்றிடுமே
உமதாவி என்னுள்ளில்
இறங்கட்டுமே – 2
மடை திறந்து வெள்ளம் போல
ஊற்றவேண்டுமே
கண்களெல்லாம் கண்ணீர் ஊற்றாய்
மாற வேண்டுமே
                              – ஜெபம் கேளும்

பலகோடி ஆத்துமாக்கள்
அழிகின்றதே
அவர் பேரில் பரிதவிக்க
யாருமில்லையே
ஜெப ஆவி எனதுள்ளே
இறங்கவேண்டுமே
திறப்பில் நின்று ஜெபிப்பவராய்
மாற வேண்டுமே
                              – ஜெபம் கேளும்

மழை வேண்டி பூமியெல்லாம்
காத்திருக்குதே
நிலை மாற எனதுள்ளம்
ஏங்குகின்றதே – 2
பெருமழை வானம் திறந்து
ஊற்றவேண்டுமே
வறட்சியெல்லாம் செழிப்பாக
மாறவேண்டுமே
                              – ஜெபம் கேளும்

Song Description: Tamil Christian Song Lyrics, Vinnappam Ketpavare, விண்ணப்பம் கேட்பவரே.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Vinnappam Ketpavare, Vinnappam Ketpavarae, Nandri 5.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *