Vellai Kuthiraiyinmel – வெள்ளைக் குதிரையின்மேல்
வெள்ளைக் குதிரையின்மேல்
ஏறி வருகிறார்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
மகிமையின் தேவன் இயேசு
எக்காளம் ஊதிட சேனைகள் தொடர்ந்திட
யுத்த வீரனாய் சாத்தானை அழிக்க
இயேசு வருகிறார்
அக்கினி ஜுவாலை கண்கள்
என் ஆசை நேசர் வருகிறார்
நீதியின் சூரியன் வருகிறார்
கிரீடங்கள் மேல் ஜெய கீரீடங்கள்
அணிந்து வருகிறார்
– வெள்ளைக்
இரத்தத்தில் தோய்த்த வஸ்திரம்
என் உயிரான இயேசு வருகிறார்
சத்தியமுள்ளவர் வருகிறார்
கோடான கோடி குதிரைகள் சூழ
வார்த்தை வருகிறார்
– வெள்ளைக்
வாயினில் கூர்மை பட்டயம்
என் ஆத்தும நேசர் வருகிறார்
யுத்தத்தில் வல்லவர் வருகிறார்
அக்கினி கடலில் சாத்தானின்
சேனையை அழிக்க வருகிறார்
– வெள்ளைக்
மகிமையின் வெள்ளை சிங்காசனத்தில்
அமர்ந்திடுந்தவர் வருகிறார்
ஜீவனுள்ளவர் வருகிறார்
ஜீவாதிபதியாய் நியாம் தீர்த்திட வருகிறார்
– வெள்ளைக்