24/04/2025
#E - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Unnathare Um – உன்னதரே உம்

Scale: E Major – 4/4
உன்னதரே உம்
பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வ
வல்லவரே உம் நிழலில்தான்
தங்கியுள்ளேன்

புகலிடமே அடைக்கலமே
கோட்டையே நம்பிக்கையே

பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது
வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது
காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே

படைத்தவரை புகலிடமாய்க்
கொண்டுள்ளேன்
பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்
தீங்கு நிகழாது நோயும் அணுகாது

வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்
மிதிப்பேன் சிங்கத்தையே நான்
நடப்பேன் சர்ப்பத்தின்மேல்

சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்
உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை
நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை

இரவில் வரும் திகிலுக்கு
நான் பயப்படேன்
பகலில் வரும் சோதனைகளை
மேற்கொள்வேன்
ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும்
பயமில்லையே

கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு
நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு

உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே
நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு

Song Description: Tamil Christian Song Lyrics, Unnathare Um, உன்னதரே உம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol – 33, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal vol 33 songs, jebathotta jeyageethangal vol 33 songs lyrics, unnadharae um songs, unnadharae um songs lyrics, Unnadhare Um, Unnathare Um.


Caller Tunes – Canaan

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *