24/04/2025
#Joseph Aldrin #Lyrics #Tamil Lyrics

Ummai Nambum Nan – உம்மை நம்பும் நான்

உம்மை நம்பும் நான் பாக்கியவான்
உம்மையே நம்பியிருப்பேன்
உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
உம் அன்பையே நம்பியிருப்பேன்

உம்மை நம்புவேன் (நான்) உம்மை நம்புவேன்
உம்மையே நம்பியிருப்பேன் – 2
                           – உம்மை நம்பும்

நீர்தானே என் துணையானீர்
என் கேடகமும் ஆனீர் – 2
என்னை நினைப்பவரே
(என்னை) ஆசீர்வதிப்பவரே – 2

உம்மை நம்புவேன்
நான் உம்மை நம்புவேன்
முடிவு பரியந்தம் உம்மை நம்புவேன் – 2
                           – உம்மை நம்பும்

உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
உம் நன்மை மிகுந்திருக்கும் – 2
குற்றப்பட்டுப் போவதில்லை
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை – 2
                           – உம்மை நம்பும்

சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
அசையாமல் நிலைத்திருப்பேன் – 2
ஆகாமியத்தின் கொடுங்கோல்
என்மேல் நிலைப்பதில்லை – 2
                           – உம்மை நம்பும்

Songs Description: Tamil Christian Song Lyrics, Ummai Nambum Nan, உம்மை நம்பும் நான்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol – 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Ummai Nambum Naan.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *