Umadhu Sevaike – உமது சேவைக்கே
தூரமாய் இருந்தேனே
துரோகியாய் வாழ்ந்தேனே – 2
உம் அன்பு என்னை அழைத்ததே – 2
உயிர் தந்து மீட்டீரே
பெயர் சொல்லி அழைத்தீரே – 2
உமது சேவை செய்யவே – 2
பிறர் கைகளை என்றும் நோக்கி பாராமல்
அழைத்த உந்தன் கைகளை
நோக்கி பார்த்திடுவேன் – 2
அழைத்தவர் நீரோ என்றும் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தமும் நடத்தி செல்பவர் – 2
தேவைகள் பல என்னை சூழ்ந்து கொண்டாலும்
தேவைகளை சந்திப்பவர் நீர் என்னோடு உண்டே – 2
வாக்குரைத்த தேவன் நீரோ உண்மையுள்ளவர்
வாக்குகளை நிறைவேற்றி நடத்தி செல்பவர் – 2
உமது சேவைக்கே – 4
அர்ப்பணிக்கின்றேன்
Songs Description: Christian Song lyrics, Umadhu Sevaike, உமது சேவைக்கே.
KeyWords: Tamil Christian Song Lyrics, Umathu Sevaikke, Samuel Frank, Umadhu Sevaikke, Thooramai Irunthene.