24/04/2025
#David Vijayakanth #Lyrics #Tamil Lyrics

Um Samugam – உம் சமூகம்


உம்மை நினைக்கும் நினைவுகளும் 
உம் பரிசுத்த நாமமும் – 2
என் ஆத்தும வாஞ்சையாய் 
இருக்க வேண்டுமே
என் ஆத்தும வாஞ்சையாக 
இருந்தால் போதுமே

உம் சமூகம் வேண்டுமே
உங்க கிருபை  போதுமே  – 3

இயேசுவின் சமூகம் வேண்டுமே
இயேசுவின் கிருபை  போதுமே – 3

1. பின்னே பார்வோன் 
சேனை தொடர்ந்தாலும் 
முன்னே யோர்தான் 
தடையாக நின்றாலும் – 2

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
முன்னும் பின்னுமாய் விலகாதவராய் 
எந்த நிலையில் நான் இருந்தாலும்
 தூக்கி என்னை தோளில் சுமக்கும் 

(உம்) சமூகம் வேண்டுமே
உங்க கிருபை  போதுமே -3 

2. சிங்க கெபியில் 
என்னை போட்டாலும் 
சூளை அக்கினியில் 
என்னை தள்ளினாலும் – 2

என்னை மீட்குமே உந்தன் சமூகமே
என் கூடவே நிழலாகவே
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் 
தூக்கி என்னை சுமப்பீரே

(உம்) சமூகம் வேண்டுமே
உங்க கிருபை  போதுமே -3


Song Description: Tamil Christian Song Lyrics, Um Samugam, உம் சமூகம்.
Keywords: David Vijayakanth, Jecinth David, Um Samoogam, Ummai Ninaikkum Ninaivugalum.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *