Um Naamam Uyartha – உம் நாமம் உயர்த்த
உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க
இந்த ஓர் நாவு போதாதைய்யா
உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற
இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா
இந்த ஓர் நாவு போதாதைய்யா
உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற
இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா
ஆயிரம் நாவுகள் வேண்டும்
ஆயிரம் ஜீவியம் வேண்டும் – 2
ஆனாலும் நீர் செய்த நன்மைகள்
விவரித்து சொல்ல இயலாதே – 2
தாயின் கருவில் கண்டவரே
தயவாய் இதுவரை சுமந்தவரே – 2
தகப்பனின் மேலாய் காப்பவரே
தரணியில் உமக்கு நிகருமுண்டோ – 2
– ஆயிரம் நாவுகள்
பாவங்கள் சுமந்த பரிசுத்தரே
பரிகார பலியாய் மரித்தவரே – 2
ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர்
ஜீவனில் உமக்கு நிகருமுண்டோ – 2
– ஆயிரம் நாவுகள்
வாக்குத்தத்தங்கள் தந்தவரே
வாக்கை நிறைவேற்ற வல்லவரே – 2
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ – 2
Songs Description: Christian Song Lyrics, Um Naamam Uyartha, உம் நாமம் உயர்த்த.
KeyWords: Tamil Christian Song Lyrics, Um Namam Uyartha, Um Namam Uyartha.