24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Vijay Aaron

Um Mugathai Nokki – உம் முகத்தை நோக்கி

உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் – 2

நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் – 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு – 4

எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர் – 2
எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் – ஓ – 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு – 4

சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர்
எனக்காய் முழுவதுமாய் – 2
ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன் – 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு – 4

பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர்
என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர் – 2
கறைகளையெல்லம் கரைய செய்தீர்
நீதிமானாக மாற்றி விட்டீர் – 2

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு – 4

Song Description: Tamil Christian Song Lyrics, Um Mugathai Nokki, உம் முகத்தை நோக்கி.
KeyWords: New Tamil Christian Song Lyrics, Bro. Vijay Aaron, Rev.Joseph Stanley, Christian Song Lyrics.

Tere Jaisa Kaun Hain

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *