24/04/2025
#Lyrics #Paul Thangiah #Tamil Christmas Songs #Tamil Lyrics

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர்

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்
நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்
பெத்லகேம் தொழுவத்திலே
தாழ்த்தப்பட்ட நிலையிலே
மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார் – 2

வணங்கி அவரை உயர்த்திடுவோமே
அவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமே
இரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனை
ஸ்தோத்தரித்து போற்றிடுவோமே – 2

1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்
ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
நித்திய பிதா நம்மோடிருக்கிறார் – 2
                               – வணங்கி

2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்
சமாதான பிரபு நம்மோடிருக்கிறார் – 2
                               – வணங்கி

Songs Description: Tamil Christian Christmas Song Lyrics, Ulagathin Meetpar, உலகத்தின் மீட்பர்.
KeyWords: Paul Thangiah, Sammy Thangiah, Christmas Song Lyrics, Tamil Christian Songs.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *