24/04/2025
#Brightson Christopher #Lyrics #Tamil Lyrics

Thanimaiyil Irundhen – தனிமையில் இருந்தேன்



தனிமையில் இருந்தேன்
திகிலடைந்திருந்தேன்
தனிமையில் இருந்தேன்
தைரியமிழந்தேன் – 2
என் அருகில் இருந்தீரே
ஆறுதல் அளித்தீரே
என் அருகில் இருந்தீரே
தைரியம் தந்திரே – 2

நன்றி இயேசுவே
உமக்கு நன்றி இயேசுவே – 4
           – தனிமையில் இருந்தேன்

1.  தீங்கு நாளுக்கே
என்னை ஒளித்து வைத்தீரே
கூடார மறைவினிலே
என்னை மறைத்து வைத்தீரே – 2
கொள்ளை நோய்
என்னை நீர் கடக்க வைத்தீரே – 2
கன்மலையின் மேலே
(என்னை) உயர்த்தி வைத்தீரே – 2

நன்றி இயேசுவே
உமக்கு நன்றி இயேசுவே – 4
           – தனிமையில் இருந்தேன்

2.  பாவத்தை தேடியே நான்
தினம் தினம் அலைந்தேனே
பரிசுத்த தேவனே
நான் உம்மை மறந்தேனே – 2
பாரினில் எங்கும்
மரண ஒலி கேட்டதே – இந்த -2
தயவாய் என்னை மட்டும்
(உந்தன்) கிருபை காத்ததே -2

அன்பு போதுமே
இந்த அன்பு போதுமே
அன்பு போதுமே
உந்தன் அன்பு போதுமே – 2
           – தனிமையில் இருந்தேன்

3. வாழ்வை உமக்கே நான்
இன்று அர்பணிக்கின்றேனே
சீர்படுத்தி என்னை
உமக்கே பயன்படுத்துமே – 2
உலகினில் எங்கும் நல்
 (உந்தன்) செய்தி கூறுவேன் – 2
ஓட்டத்தில் ஜெயமெடுத்து
(நான்) சீயோன் சேருவேன் – 2

இயேசு வருகிறார்
எங்கள் இயேசு வருகிறார்
ஆயத்தமாகிடுவோம் செல்ல
ஆயத்தமாகிடுவோம் – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் – 4
நன்றி இயேசுவே
உமக்கு நன்றி இயேசுவே – 2


Song Description: Thanimaiyil Irundhen, தனிமையில் இருந்தேன்.
Keywords: Brightson, Jenitha, Thanimaiyil Irunthen, Thanimayil Irunthen, Thanimaiyil Irundhen.

Uploaded By: Brightson  Christopher.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *