24/04/2025
#Devotional #Devotional Tamil

Solution – தீர்வு




Rolls Royce

அமெரிக்க தேசத்தில் ஒருமுறை சாலையில் ஒரு கார் பழுதாகி நின்று போயிருந்தது. அந்த காரின் உரிமையாளர் என்னவென்று பார்த்து சரி செய்ய முற்பட்டார் சரி செய்ய முடியவில்லை. பிறகு அருகில் உள்ள மெக்கானிக் ஐ வர வரவழைத்து பார்த்தார் சரி செய்ய முடியவில்லை. பிறகு அந்த காரின் மெக்கானிக் களையே சரி செய்ய ஆட்களை வரவழைத்தார். அவர்களும் பல மணிநேரமாக சரி செய்து கொண்டு இருந்தனர். அந்த கார் மிகவும் விலை உயர்ந்தது. அது Rolls -Royce கார். அந்த உரிமையாளர் மற்றும் சரி செய்யும் ஆட்கள் என பலர் சரி செய்யும் பணியில் மிக மும்முரமாக ஈடு பட்டிருந்தனர். அப்பொழுது அந்த சாலையில் வாக்கிங் வந்த ஒரு வயதான முதியவர் அந்த காரை கண்டவுடன், அருகில் வந்து என்ன பிரச்சனை என்றார்?. அதற்கு அந்த கார் ஓனர், அது எதுக்கு உங்களுக்கு, சொன்ன என்ன செய்ய போறீங்க போங்க என்றார். மீண்டும் அந்த முதியவர். நான் வேணுன்னா என்னவென்று பார்க்கவா? என்றார். அதற்கு அனைவரும் கோபம் கொண்டு, பிறகு சரி என்னதான் பண்ணுகிறார் பார்க்கலாம் என விலகி நின்றனர். அந்த முதியவர் அருகில் சென்று பார்த்து, குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு 5 நிமிடம் மட்டும் தான் வேலை செய்து இருப்பார். ஒரு ஒயர் ஐ சரி செய்து விட்டு, இப்போ கார் ஐ ஸ்டார்ட் பண்ணுங்க என்றார். எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம். காரும் ஸ்டார்ட் ஆகி விட்டது. அந்த உரிமையாளரிடம் அந்த முதியவர் ஒரு விசிட்டிங் கார்டு ஐ கையில் கொடுத்து விட்டு, எதும் பிரச்சனை என்றால் என்னை அழையுங்கள் என்று கூறி கொடுத்து விட்டு, நடந்து சென்றார். அந்த கார்டு ஐ வாங்கி பார்த்தால், அது rolls royce ன் ஓணர். அந்த கார் காம்பனி ஓனரே அவர் தான். பிறகு ஓடி சென்று அனைவரும் மன்னிப்பு கேட்டு, autograph, photos, என எடுத்து கொண்டனர்.
ஆச்சரியம் !!
ஒரு கார் கம்பெனி ஓனர் இப்படி வருவார் என்று யாரும் யோசித்து கூட இருக்க மாட்டோம். ஒரு நபரை பார்ப்பதாலோ, பேசுவதாலோ கண்டிப்பாக அவர் யார் என்று அறிந்திட முடியாது. அதே போலவே தான்.
நமக்கு அநேக பிரச்சனைகள் இருக்கலாம் அதை சரி செய்ய நிறைய முயற்சிகள் எடுப்போம். அது அப்போதைக்கு ஒரு தீர்வு மட்டுமே !அதாவது நம்மை நாமே சரி செய்ய பாடல்கள் கேட்பது, motivational videos,fb, youtube, சினிமா பார்ப்பது போன்றவற்றை செய்வோம் அது அதை நாம் செய்யும் வரை மட்டுமே. மீண்டும் அதே பிரச்சனை அதே கவலை திரும்ப வந்து விடும். ஆனால் உண்மையான தீர்வு . நம்மை உருவாக்கின கடவுளிடம் தான் உள்ளது.நாமும் கூட சில நேரங்களில் தேவனையே உதாசீன படுத்துவதுண்டு. ஆனால், அவருக்குத்தான் மிக சரியாக என்ன பிரச்சனை என்பதும், அதற்கான தீர்வு அதாவது நிரந்தர தீர்வும் கொடுக்க முடியும்.அவர் நம்மில் வரவும், நம்மில் கிரியை செய்யவும் நாம் முதலாவது அனுமதிக்க வேண்டும்.எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு நிச்சயம்


Sis. Meena Juliet


Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet,  Solution – தீர்வு.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *