Sela Sela – சேலா சேலா
கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்
கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்
நான் தாழ்ச்சியடையேன்
நான் தாழ்ச்சியடையேன்
ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மை கிருபையும்
என்னைத் தொடருமே
புல்லுள்ள இடங்களிலே
என்னை அழைத்து செல்கின்றார்
என் கால்கள் வழுவாமலே
சுமந்து செல்கின்றார்
அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்
ஆத்துமாவை தேற்றுகிறார்
உமது நாமத்தின் நிமித்தம்
நீதியின் பாதைகளில் நடத்துகிறீர்
மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நான் நடந்து போனாலும்
பொல்லாப்புக்கு நான்
பயப்படவே மாட்டேன்
அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்
ஆத்துமாவை தேற்றுகிறார்
உமது கோலும் உமது தடியும்
தேற்றி நடத்திடுமே
சத்துருக்களுக்கு முன்பாக
பந்தியை ஏற்படுத்தி
எண்ணெயால் என் தலையை
அபிஷேகம் பண்ணுகிறீர்
அமர்ந்த தண்ணீர்கள் அலங்கத்தில் சமாதானம்
ஆத்துமாவை தேற்றுகிறார்
கர்த்தரின் வீட்டிலே நீடித்த
நாட்களாய் நிலைத்து நிற்பேன் நான்