24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Theophilus William Titus #TPM Songs

Seeyonilae En Thida – சீயோனிலே என் திட

 
சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை – 2

1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே – 2

2.புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் – 2

3.வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் – 2

4.மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி – 2

5.நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை
நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே – 2

Seeyonilae En Thida Asthipaaram Kiristhuvae
Avar Naan Entum Nampum Kanmalai – 2

1.Kalangiduvaeno Pathariduvaeno
Karththaril Visuvaasam Irukkaiyilae
Asaiyaa En Nampikkai Nangooramae
Yesuvil Maaththiramae – 2

2.Puyalatiththaalum Alai Mothinaalum
Evar Enakkethiraay Elumpinaalum
Enakku Ettatha Uyaraththilae
Eduththavar Niruththiduvaar – 2

3.Viyaathiyinaalae Kaayam Varunthi
Vaatiyae Marana Nilal Soolinum
Visuvaasaththin Karaththaalavar
Vaakkai Naan Pattiduvaen – 2

4.Maa Parisuththa Visuvaasaththaalae
Maa Parisuththa Sthalam Aekidavae
Thirai Valiyaam Than Sareeraththinaal
Thiranthaarae Thooya Vali – 2

5.Naan Visuvaasippor Innaarentarivaen
Ennaiyae Pataiththittaen
Avar Karaththil Mutivuvarai
Nadaththiduvaar Muttumaay Iratchippaarae – 2


Song Description: Seeyonilae En Thida, சீயோனிலே என் திட.
Keywords: Tamil Christian Song Lyrics, Seeyonilae En Thida Asthibaram.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *