24/04/2025
#Lyrics #Praison Stanley Timothy #Tamil Lyrics

Santhosham Samathanam – சந்தோஷம் சமாதானம்

சந்தோஷம் சமாதானம் ஆனந்தம் பேரின்பம்
அப்பா உம் சமுகத்திலே

அற்புதம் அதிசயம் ஆறுதல் நம்பிக்கை
அப்பா உம் பிரசன்னத்திலே – 2

ஆராதனை ஆராதனை
யேகோவா தேவனே ஆராதனை – 2
ஆராதனை ஆராதனை
எந்நாளும் ஆராதனை – 2

பிள்ளையானேன் சொந்தமானேன்
அப்பா என்றழைக்கும் உரிமை பெற்றேன் – 2
சுதந்தரவாளியாய் மாற்றப்பட்டே
என்றும் நான் உம் சொந்தமே – 2
                                                      – ஆராதனை

தோல்வியில்லை வெட்கமில்லை
யேகோவா நிசி என்னோடு உண்டே – 2
உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
என் வாழ்வின் ஜெயக்கொடி நீர் – 2
                                                      – ஆராதனை

சோர்ந்திடேனே நான் கலங்கிடேனே
எல்ஷடாய் தெய்வம் என் சுதந்தரமே – 2
சகலத்தையும் செய்ய வல்லவரே
உம்மை நான் ஆராதிப்பேன் – 2
                                                      – ஆராதனை

Song Description: Tamil Christian Song Lyrics, Santhosham Samathanam, சந்தோஷம் சமாதானம்
KeyWords: Santhosam Samathanam, Santhosham Samathaanam, Worship Songs, Sattur A.G. Church, Praison Stanley Timothy, Santhosham Samadhanam Anandham, Christian Song Lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *