24/04/2025
#F - Minor #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Raja Neer Seitha – ராஜா நீர் செய்த

Scale: F Minor – 6/8
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதைய்யா
ஏறெடுப்பேன் நன்றி பலி
என் ஜீவ நாளெள்ளாம்

நன்றி ராஜா இயேசு ராஜா  -4

அதிகாலை நேரம்
தட்டி தட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரைய்யா
ஆனந்த மழையில் நனைந்து நனைந்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரைய்யா -2

வேதத்தின் இரகசியம்
அறிந்திட புரிந்திட
உம் வெளிச்சம் தந்தீரைய்யா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரைய்யா

ஒவ்வொரு நாளும்
உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரைய்யா
அன்பர் உம் கரத்தால்
அணைத்து அணைத்து தினம்
அதிசயம் செய்தீரைய்யா

கூப்பிட்ட நாளில்
மறுமொழி கொடுத்து
விடுதலை தந்தீரைய்யா
குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
கூடவே வந்தீரைய்யா

உமக்காக வாழ
உம் நாமம் சொல்ல
தெரிந்து எடுத்தீரைய்யா
உம்மோடு வைத்து ஊழியனாக
உருவாக்கி வந்தீரைய்யா

Songs Description: Tamil Christian Song Lyrics, Raja Neer Seitha, ராஜா நீர் செய்த.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Umakkaha Thane, Raja Neer Seitha Nanmaigal.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *