24/04/2025
#Admatha Rajesh #Lyrics #Tamil Lyrics

Pothumae – போதுமே

உம் பாதம் நான் அமர்ந்திருப்பேன்
இதிலும் மேலான தொன்றும் இல்லை
உம் மார்பில் நான் சாய்ந்திருப்பேன்
என் தஞ்சம் நீரே – என் இயேசுவே

போதுமே உம் சமுகமே
போதுமே உம் பிரசன்னமே
குறைவெல்லாம் நீங்கிடுதே
இயேசுவே என் தஞ்சம் நீரே

நான் நினைப்பதும் எதிர்பார்ப்பதும்
விட மேலானதை எனக்கு செய்பவரே
என் தகப்பனே கைவிடா தேவனே
என் நங்கூரமே என் ஜீவனே
போதுமே …..

என் அக்ரமங்கள் என் பாடுகள்
நீர் ஏற்றுக்கொண்டு பாவமானீர்
என்னை மன்னித்தீர்
நித்திய மீட்பை தந்தீர்
உம் பிள்ளையாகும்
பாக்கியம் பெற்றுக்கொண்டேன் – 2

போதுமே உம் சமுகமே
போதுமே உம் பிரசன்னமே
பலியாகி மீண்டும் உயிர்த்தீரே
உம்மிலே நான் என்றும் சுவாசிப்பேனே

Song Description: Tamil Christian Song Lyrics, Pothumae, போதுமே.
KeyWords: Christian Song Lyrics, Admatha Rajesh, Rajesh Kumar, Um Paatham Naan.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *