24/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Paraloga Thanthaiye – பரலோக தந்தையே

பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே
பல கோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே

பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே – 2
ஒரு மனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே – 2
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் – 2

அப்பத்த கேட்டா கல்ல கொடுப்பானா
மீன கேட்டா பாம்ப கொடுப்பானா
முட்டைய கேட்டா தேளை கொடுப்பானா
பொல்லாத தகப்பனே நல்ல ஈவை அறியும் போது

இம்மைக்கும் மறுமைக்கும்
பரம தகப்பன் நீர் தானே – 2
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் – 2

பறந்து காக்கும் பட்சியைப் போலே
தேவன் தினமும் காத்திடுவாரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போலே
தேவன் தினமும் சுமந்திடுவாரே

தாயைப் போல் தேற்றுவார்
தகப்பனை போல் சுமந்திடுவார் – 2
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் – 2

புள்ளுள்ள இடங்களில் மேய்த்திடுவாரே
அமர்ந்த தண்ணீரைன்டை நடத்திடுவரே
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கின்ற போது
தாழ்ச்சியென்பது வாழ்வினில் இல்லை

நன்மையும் கிருபையும்
வாழ்நாளெல்லாம் தொடர செய்வார் – 2
ஓயாத புகழ்ச்சி ஓயாத கனமும்
நிறைந்த எம் தேவன தொழுக வந்தோம் – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Paraloga Thanthaiye, பரலோக தந்தையே.
KeyWords: Lucas Sekar, Paraloga Thandhaiye, Christian Song Lyrics, Worship Songs.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *