24/04/2025
#E - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Pallangalellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட

Scale: E Major – 6/8
பள்ளங்களெல்லாம்
நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள்
தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார்
ஆயத்தமாவோம்
இயேசு வருகிறார்

எதிர்கொண்டு செல்லுவோம்

நல்ல கனிகொடா
மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில்
போடப்படும்

கோதுமையைப் பிரித்து
களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில்
சுட்டெரிப்பாரே

அந்நாளில் வானம்
வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து
உருகிப் போகும்

கரையில்லாமல்
குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து
முன்னேறுவோம்

அனுதினமும் ஜெபத்தில்
விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெயால்
நிரம்பிடுவோம்

Songs Description: Tamil Christian Song Lyrics, Pallangalellam Nirambida, பள்ளங்களெல்லாம் நிரம்பிட. 
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Pallangal Ellam Nirambida, JJ Songs, Father,  
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *