Netrum Intrum – நேற்றும் இன்றும்
We’ll Worship forever!!
We’ll Praise Him forever!!
We’ll lift Him forever!!
He Loves us forever!
forever!
நேற்றும் இன்றும் மாறா
ஒரு தேவன் எனக்குண்டு
நேசக் கரத்தால் தாங்கும்
ஒரு நண்பன் நமக்குண்டு – 2
அவர் வானிலும் சிறந்தவர்
இந்தப் புவியிலும் பெரியவர்
நம் பெலனுமானவர்
அவர் சர்வ வல்லவர்!
He is the Best, the Best
நம் தேவன் Best தான் – 2
அவர் கிருபை Best தான்
அவர் வார்த்தை Best தான்
அவர் அன்பும் Best தான்
எல்லாமே, Best தான்!
1) காலையில் எழுந்தவுடனே
அவர் பாதம் தேடுவோம்
பாதத்தில் கருத்தாய் ஜெபித்து
புது பாடல் பாடுவோம் – 2
அவர் அன்பை நினைக்கையில்
எங்கள் உள்ளம் நெகிழுதே
நாங்கள் அவரின் சொந்தமே
அவர் கரங்களில் தஞ்சமே!
– He is
– We’ll Worship
2) பாவம் நிறைந்த உலகை
மீட்க பரிசுத்தர் பிறந்தாரே
மகிமை எல்லாம் துறந்து
தேவ சித்தம் முடித்தாரே – 2
தலை சாய்க்க இடமின்றி
நம் பாடுகள் ஏற்றாரே
தம்மை முழுவதும் தந்தாரே
நமக்காய் சிலுவையில் மரித்தாரே!
– He is
3) தேவனின் வார்த்தை காட்டும்
ஜீவ பாதை செல்லுவோம்
இயேசுவின் தியாக அன்பை
சுவிசேஷமாய் செல்லுவோம் – 2
அவர் அன்பிற்கு ஈடில்லை
அன்பின் தெய்வம் வேறில்லை
நம் பாதைக்கு வெளிச்சமாய்
அவர் வார்த்தை இருக்குமே
– நேற்றும்