24/04/2025
#Lyrics #RJ Pradeep Kumar #Tamil Lyrics

Naanga Valai Veesi – நாங்க வலைவீசி


நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க

1. பாவி நானுங்க
படகைவிட்டு வந்தேனுங்க
பாசம் வச்சேங்க
பழைய குணம் போச்சுங்க

2. யோவான் நானூங்க
யாக்கோபுக்கு அண்ணனுங்க
இயேசுவின் மார்பினிலே
சாஞ்சு படுத்துக் கொள்வேனுங்க

3. தோமா நானூங்க
சந்தேகமா இருந்தேங்க
நானும் இந்தியாவுக்கு
சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க

4.Department கஸ்டம்ஸ்
இயேசு எனக்கு இஸ்டம்ஸ்
லேவி Surname
மத்தேயு My Name

5. இந்த ஊரில் இருப்பவங்க
ரொம்ப ரொம்ப நல்லவங்க
இயேசுவை ஏற்றுக்கொண்டால்
இன்பமாக வாழுவீங்க

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க
எங்க நாதருங்க உங்க நாதருங்க
எங்க நாதருங்க நம்ம நாதருங்க


Song Description: Tamil Christian Song Lyrics, Naanga Valai Veesi, நாங்க வலைவீசி.
KeyWords:  Christian Song Lyrics, RJ Pradeepkumar, Aadharam.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *