Naan Paavithan – நான் பாவிதான்
நான் பாவிதான்
ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
இன்று உம் பிள்ளை நான்
ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
இன்று உம் பிள்ளை நான்
கல்வாரியின் மலைமீதிலே
உம் பாடுகள் எனக்காகத்தான் – 2
உம் கைகாலிலே காயம் எல்லாம்
நான் செய்த பாவமைய்யா – 2
– நான் பாவிதான்
கன்னங்களில் வழிந்தோடிடும்
கண்ணீரும் எனக்காகத்தான் – 2
உம் கைகாலிலே வழிந்தோடிடும்
திரு இரத்தாம் எனக்காகத்தான் – 2
– நான் பாவிதான்
மூன்றாணியால் என் பாவங்கள்
சுமந்து தீர்த்தீரைய்யா – 2
மூன்றாம் நாளில் எனக்காகவே
உயிரோடு எழுந்தீரைய்யா – 2
– நான் பாவிதான்
நான் பாவியல்ல
எனக்காக திரு இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
என்றும் உம் பிள்ளை நான்
Song Description: Tamil Christian Song Lyrics, Naan Pavithan, நான் பாவிதான்.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Naan Paavithaan, Naan Paavithan, Nan Pavithan.