24/04/2025
#Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Naan Paadumpothu – நான் பாடும் போது



நான் பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்                                 
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்

1. நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு 
நிறைந்து இருக்கிறது

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்

2. எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும் 
எல்லாம் நீர்தானே 

3. கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

4. இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர் 
நோக்கமும் நம்பிக்கையும்

5. முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Paadumpothu, நான் பாடும் போது.
KeyWords: Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans, Jebathotta Jeyageethangal Vol – 41, Nan Padumpothu, Naan Padumpothu.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *