24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Wedding Songs

Mangalam Sezhikka – மங்களம் செழிக்க

மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே

சரணங்கள்

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ
மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

2. மங்கள மணமகன் ———–க்கும்
மங்கள மணமகள்    ————க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும்
நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும்
சத்திய வேதர்க்கும்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர்
வாழ நடத்தியருளுமே

Songs Description: Tamil Christian Song Lyrics, Mangalam Sezhikka, மங்களம் செழிக்க.
KeyWords: Tamil Christian Marriage Songs, Wedding Songs, Mangalam Selikka, Mangalam Sezhikka.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *