எனக்காக யாவையும் செய்து முடிப்பார் அவரே என்னை அழைத்ததால் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் அவரே எனக்குள் இருப்பதால் பயமில்லை, பயமில்லை இயேசு என்னோடு இருப்பதால்
இராஜா நீர் செய்த நன்மைகளை என்றென்றும் நினைத்து துதித்திடுவேன் இராஜா நீர் செய்த நன்மைகளை என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன் நீர் நல்லவரே, சர்வ வல்லவரே, என்றென்றும் பெரியவரே
நாம் கிரகிக்கக் கூடாத காரியங்கள் செய்திடுவார் நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் பெரியவர் எனக்குள் இருப்பதினால் பெரிய காரியங்கள் செய்திடுவார் ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
அற்புதங்கள் செய்வது அற்ப காரியம் அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லை மழையையும் காண்பதில்லை ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே தண்ணீர்
அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உந்தன் வார்த்தையாலே அசையாத மலை கூட அசைந்திடுமே அமாராத புயலும் கூட அமர்ந்திடுமே எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே