24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Kristhava Jeeviyam – கிறிஸ்தவ ஜீவியம்

 
கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்
கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம் – 2
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ – 2

பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே
லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ – 2
உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்
யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ – 2
– கிறிஸ்தவ ஜீவியம்

நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்
அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார் – 2
ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்
ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ – 2
– கிறிஸ்தவ ஜீவியம்

காரிருள் பாரினில் படர்ந்திடும் வேளையில்
இராஜாக்கள் நேதாக்கள் சத்ருக்கள் ஆகையில்
அக்னி கடலிலும் சிங்கக் கெபியிலும் – 2
தானியேலின் தெய்வம் என் கூட்டாளி அல்லவோ – 2
– கிறிஸ்தவ ஜீவியம்

இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்
நித்யமாம் ராஜா என் கூட்டாளி அல்லவோ – 2
என்ன இப்பாரங்கள் என்ன இக்கிலேசங்கள்
கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ – 2
– கிறிஸ்தவ ஜீவியம்

எக்காள நாதம் நான் கேட்டிடும் வேளையை
கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே – 2
என்று நீர் வருவீர் எப்போ நீர் வருவீர்
என் கண்ணீர் துடைக்க என் நேசக் கூட்டாளியே – 2
– கிறிஸ்தவ ஜீவியம்

Kristhava Jeeviyam Saubhagya Jeeviyam
Kiristhuvin Makkatkor Aanantha Jeeviyam
Kashdangal Vanthaalum Nashdangal Vanthaalum
Kiristhaesu Naayakan Koottali Allavo
– Kristhava Jeeviyam

Boologa Innbangal Maarippoyvidumae
Boologarellaarum Kaividuvaarallo
Uttraar Uravinar Thalli Veruththaalum
Yoseppin Theivamen Koottali Allavo
– Kristhava Jeeviyam

Nambum Sagotharar Vambu Seythiduvaar
Appam Pusiththittor Kuthi Kaalai Thookkuvaar
Aaraaththuyarilum Maaraa Kannnneerilum
Aattridum Theivamen Koottali Allavo
– Kristhava Jeeviyam

Kaarirul Paarinil Padarnthidum Velaiyil
Rajaakkal Nethaakkal Sathrukkal Aagayil – 2
Akni Kadalilum Singa Kebiyilum
Thaaniyelin Theivam En Koottaali Allavo – 2
– Kristhava Jeeviyam

Yesu En Nal Meiyppar, Yesu En Sinaegithar
Nithyamaai Raajaa En Koottali Allavo
Ennae Ippaarangal Ennae Ikklaesangal
Kiristhesu Raajaa En Koottali Allavo
– Kristhava Jeeviyam

Ekkaala Naatham Naan Kaetdidum Velaiyai
Kashdangal Yaavumae Neengidum Naeramae
Entru Neer Varuveer Eppo Neer Varuveer
En Kannnneer Thutaikka En Naesak Koottaliyae
– Kristhava Jeeviyam


Song Description: Kristhava Jeeviyam, கிறிஸ்தவ ஜீவியம்.
Keywords: Tamil Christian Song Lyrics, Kiristhava Jeeviyam.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *