Karam Pidithu Unnai – கரம் பிடித்து உன்னை
கரம் பிடித்து உன்னை
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு
உண்டு பயந்திடாதே
படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து
உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த
முடியாதே – கலங்கிடாதே
ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன்
மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக
இருப்பாரே – கலங்கிடாதே
சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை
என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை
அவர் அணைப்பாரே – கலங்கிடாதே
Song Description: Tamil Christian Song Lyrics, Karam Pidithu Unnai, கரம் பிடித்து உன்னை.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Karam Pidithu Unnai Entrum.
Unknown
30th Jan 2020MSG me the scale n chord