Inside White – வெள்ளை உள்ளம்.
“நான் வெளியில் கருப்பு
என் உள்ளமோஉள்ளே வெள்ளை,
நீங்கள் வெளியில் வெள்ளை, உங்கள்
உள்ளே உள்ளம் கருப்பு “
“நான் வெளியில் கருப்பு
என் உள்ளமோஉள்ளே வெள்ளை,
நீங்கள் வெளியில் வெள்ளை, உங்கள்
உள்ளே உள்ளம் கருப்பு “
இதையே ஒரு 5 நிமிடம் கூறி கொண்டே இருந்தார். கண்களை மூடி.
அடுத்த 6 ஆவது நிமிடம் சபையில் உள்ள மக்கள் கீழே விழ ஆரமித்தனர். அழுது ஒப்பு கொடுக்க ஆரம்பித்தனர். தங்களின் தவறை உணர்ந்து கர்த்தரிடத்திலும், அந்த போதகரிடத்திலும் ஒட்டு மொத்த சபையும் மன்னிப்பு கேட்டது.
அதன் பின் செய்தியை கொடுக்க ஆரம்பித்தார்.
நிறங்களின் அடிப்படையில் கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறாரா?
அன்பு காண்பிக்கிறாரா?
இல்லவே இல்லை.
நம்முடைய கண் நிறத்தை தேர்வு செய்ய கடவுள் நம்மை அனுமதித்தாரா? நம் சருமத்தின் நிறம் எப்படி? உங்கள் முக எலும்பு அமைப்பு? எல்லாவற்றையும் கடவுளே தேர்ந்தெடுத்து படைத்து உள்ளாரே ! கடவுள் நம முகம் பார்க்கும் முன்னே தாயின் வயிற்றிலேயே நம்மை நேசிக்க ஆரம்பித்து விட்டார்.
நிறங்களையும், அழகையும் சில நேரங்களில் பெற்றோரே சொல்லி காண்பிப்பது உண்டு. நம்முடைய வாழ்வின் போராட்டங்கள் தோளின் நிறங்களோடு அல்ல.
கடவுள் நம் சருமத்தின் நிறத்தை தேர்வு செய்திருகிறார். நாம் கதாபாத்திரத்தையும், குணங்களையும் நாம் தேர்வு செய்வோம்.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.