24/04/2025
#Devotional #Devotional Tamil

For Youth – வாலிபர்களுக்கு





இன்றைய கிறிஸ்தவ வாலிபர்களுக்கு இப்போதைய அவசிய தேவைகள்!

1. ஆரோக்கியமான உபதேசங்கள். கேட்பதற்கு உங்களுக்கு சற்று boring ஆகவும் , அவைகளை கேட்கும்போது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றோ தோன்றக்கூடும். ஆனால் மிக மிக முக்கியமானது. சாத்தியமில்லாத ஒன்றை தேவன் செய்ய சொல்ல மாட்டார். 1 தீமோத்தேயு 4:6

2. தேவனிடத்தில் இருந்து வருகிற ஆசீர்வாதங்கள் பற்றி அதிகம் வாசிப்பதை, கேட்பதை, போதிப்பதை விட, கிறிஸ்துவுக்குள் தேவனின் பரிபூரண சித்தம் என்ன என்பதையே அதிகம் நாட வேண்டும். ரோமர் 8 :28 , மத்தேயு 7 :21

3. விசுவாசிகளை உருவாக்குவது நல்லது தான், விசுவாசிகளாக இருப்பதும் நல்லது தான். ஆனால் இயேசு விரும்புவது நாம் யாவரும் அவருக்கு சீஷர்களாக நாம் மாற வேண்டும் என்பதே. ஆகவே இயேசுவுக்கு சீஷனாக மாற வேண்டிய காரியங்களை குறித்து அதிகம் போதிக்க வேண்டும். கிறிஸ்துவுக்காக வைராக்கியமான சாட்சியாக வாழுவது. மத்தேயு 28 :19

4. சத்தியத்துக்கு திரும்ப வேண்டும். என்ன தான் காலங்கள்,technology, trend என்று மாறினாலும், சத்தியம் ஒருக்காலும் மாறாது. நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் வேதத்துக்கு ஒத்ததாக இருக்கிறதா என்பதை அறிந்து செய்யவது அவசியம். சுருக்கமாக trend க்காக சத்தியத்தை compromise பண்ண கூடாது. கலாத்தியர் 1 :6 – 9

5. பரிசுத்த ஆவியின் வரங்களை குறித்தும், ஆவியின் கனியை குறித்ததுமான சமநிலை போதனை மிகவும் அவசியம். யோவான் 15 : 1 -10 , I கொரிந்தியர் 12 ,14 , கலாத்தியர் 5 :22 ,23

6. ஆத்தும பாரத்தை குறித்த முக்கியத்தும், சுவிசேஷம் அறிவிக்க வேண்டியதின் முக்கியத்துவம் பற்றி அதிகம் பேச வேண்டும், போதிக்கப்பட வேண்டும். சுவிசேஷத்தை சொல்லவும் வேண்டும், அதை போலவே வாழவும் வேண்டும். மத்தேயு 28 :19 ,20

7. அனுதின வேத வாசிப்பும், தியானமும் ,நேரமெடுத்து செய்யப்படும் தனி ஜெபமும் மிகவும் முக்கியம். 
சங்கீதம் 1 :2 , I தெசலோனிக்கேயர் 5 :17

8. One to one என்கிற முறைப்படி வேத அறிவில் தேர்ந்தவர்கள், நற்சாட்சி பெற்றவர்கள் வாலிபர்களோடு கலந்து பேசி, காரியங்களை விளக்க வேண்டும். எல்லாவற்றையும் போதகர் மேடையில் பேசிவிட முடியாது. I தீமோத்தேயு 4 :11 -13 பவுல் , இளம் ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதிய அத்தனை அதிகாரங்களும்.

9. எல்லா வகையான ஊழியங்களிலும் செயல்படுத்தப்படும் காரியங்கள் கிறிஸ்து இயேசுவின் அன்பை மையமாக வைத்தே செய்யப்பட வேண்டும். 
I கொரிந்தியர் 16 :14 , கொலோசெயர் 3 :14

10. வாழ்க்கைக்கு தேவையான சகல நல்லொழுக்கங்கள், பெரியவர்களை கனம் பண்ணுதல், சமுதாயத்தில் சாட்சியாக வாழுதல், பொறுப்போடு செயல்படுதல், எல்லோரையும் நேசித்தல், 
உழைப்பு, கல்வியின் முக்கியத்துவம், தாலந்துகளை சரியாக பயன்படுத்துதல் போன்ற அடிப்படையான நற்குணங்களை பற்றி போதிக்கப்பட வேண்டும். ரோமர் 12 :7 -21 ,மற்றும் சுவிஷேங்களில் கிறிஸ்துவின் போதனைகள்

11. இயேசு கிறிஸ்துவை (மட்டும்) மாதிரியாக பின்பற்றுதல்! எதை செய்தாலும் அவரை போல செய்கிறோமா? நடக்கிறோமா? வாழ்கிறோமா? என்று அவ்வப்போது நம்மை நாமே சோதித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. 
அப்போஸ்தலர் 1 :8 , லூக்கா 9 :23 ,24

12. சத்தியத்தை விட்டு திசை திரும்ப செய்யும் ஊழியங்களை, ஊழியர்களை வேதத்தின்படி அடையாளங்காட்டி எச்சரித்தல். அவர்களை விட்டு விலகி இருப்பது. மத்தேயு 24 :23 ,24 , II பேதுரு 1 – 3 , எபேசியர் 5 : 11

13. ஊழியம் என்றால் என்ன? வேதத்தின்படி ஊழியம் செய்வது எப்படி? என்ற ஊழியம் சம்பத்தப்பட்ட காரியங்களை குறித்த தெளிவு பெற போதிக்கப்பட வேண்டும். மத்தேயு 20 :28


Bro. Godson GD


Description: Devotional Tamil Message By Bro. Godson GD, For Youth, வாலிபர்களுக்கு.
Keywords: Bro. Godson GD, Devotional, Tamil Devotional Message, For Youths.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *