24/04/2025
#B - Minor #Freddy Joseph #Lyrics #Tamil Lyrics

Entha NIlaiyil Naan – எந்த நிலையில் நான்

Scale: B Minor – 4/4

எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே – 2

அனாதையாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை வேண்டுமா என்று
அலைய வைப்பார்கள் – எந்த

பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி
பரிகசிப்பார்கள் – எந்த

நோயாளியாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி
நோக வைப்பார்கள் – எந்த

கடனாளியாய் நானிருந்தால்  பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி
கலங்க வைப்பார்கள் – எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

Song Description: Tamil Christian Song Lyrics, Entha NIlaiyil Naan, எந்த நிலையில் நான்.
KeyWords: Christian Song Lyrics, Freddy Joseph Songs, Endha Nilaiyil Song Lyrics, Entha Nilayil.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *