24/04/2025
#Dhass Benjamin #Johnkish Theodore Isaac #Lyrics #Tamil Lyrics

Ennidam Ondrumillai Entru – என்னிடம் ஒன்றுமில்லை என்று

என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று – 2

தாசன் எலியா காலத்தில்
காகம் மூலம் போஷித்தீர்
தாசன் மோசே காலத்தில்
மன்னா மூலம் போஷித்தீர் – 2
செருப்பும் தேயவில்லை
துணியும் கிழியவில்லை
உம் அதிசய கரம் நடத்திற்று – 2
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று – 2

இரவில் கிடந்து புலம்பினேன்
நடக்கும்போதும் புலம்பினேன்
வறுமை நினைத்து கலங்கினேன்
நிஜத்தை நினைத்து கதறினேன் – 2
உண்ண உணவும் தந்தீர்
உறங்க இடமும் தந்தீர்
உம் அதிசய கரம் நடத்திற்று – 2
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று – 2

நண்பர்களும் மரித்தனர்
உறவினரும் மரித்தனர்
மரண ஓலம் ஒலித்தன
கல்லறைகள் நிரம்பின – 2
உயிருடன் நான் இருக்கிறேன்
சொல்ல சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
உயிருடன் நான் இருக்கிறேன்
சாட்சி சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று

என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Ennidam Ondrumillai Entru, என்னிடம் ஒன்றுமில்லை என்று.
KeyWords: Dhass Benjamin, Johnkish Theodore Isaac, Ennidam Ontrum Illai Entru.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *