Endhan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே
எந்தன் ஜீவன் இயேசுவே
என்னை மீட்டு கொண்டீரே
எந்தன் பாவம் அனைத்தையும் சுமந்தீரே
உந்தன் அன்பில் என்னை கரம் பிடித்தீரே
என்னை மீட்ட தேவனே நீர் இயேசைய்யா – 2
எல்லாம் தந்தவர்
எனக்குள் வந்தென்னில்
எல்லாம் ஆனவர் நீரே – 2
1.கருவினில் பெயர் சொல்லி
என்னை அழைத்தீரே
அழைத்த நொடி முதல்
கண்ணின் மணி போல காத்தீரே
உந்தன் கரத்தில் வரைந்தென்னை
வழுவி செல்லாமல் வைத்தீரே
உலகின் பாவ வழிகளில்
சிதைந்து செல்லாமல் நடத்தியே
என்னை உயர்த்தி வைத்தவரே
உம்முயிர் கொடுத்து
காத்தவர் நீரைய்யா
எல்லாம் தந்தவர்
எனக்குள் வந்தென்னில்
எல்லாம் ஆனவர் நீரே – 2
2.இந்த பாரிலே உம்மை பாடவே
என்னை தெரிந்து கொண்டீரே
இசை பாடியே கவி பேசியே
உந்தன் நாமத்தை உயர்த்தியே
ஒரு சாட்சி வாழ்வினையே
என்னில் நிலவ செய்தவரே
உந்தன் முகத்தின் பொலிவினையே
என்னில் ஒளிர செய்தவரே
எனக்கெல்லாம் தந்தவர் நீரே
என்னில் சுவாசம் விதைத்தவர் நீரே
எனக்கெல்லாம் ஆனவர் நீரே
இந்த வாழ்த்துக்குரியவர் நீரே- எந்தன் ஜீவன்