24/04/2025
#John F. Aruldoss #Lyrics #Tamil Lyrics

En Piriyamae – என் பிரியமே!

என் பிரியமே! என் ராஜாவே!
என் நேசரே! என் இயேசுவே!
உமக்கே ஆராதனை! உமக்கே ஆராதனை! – 4

1. உம்மைப் பிரிந்து எங்கே செல்வேன்
வாழ்வு தரும் வார்த்தை
உம்மிடம்தானே – 2
– உமக்கே

2. ஆழத்திலிருந்து அழுதேன் ஐயா
கைதூக்கி களிக்கச் செய்தீரையா – 2
– உமக்கே

3. வழி தெரியாமல் திகைத்து நின்றேன்!
ஒளி ஸ்தம்பமாய் எந்தன் முன்னே சென்றீர்! – 2
– உமக்கே

4. அபிஷேகம் தந்து அணைத்தீரைய்யா!
ஆவியில் மகிழச் செய்தீரையா – 2
– உமக்கே

5. உம் வசனம் தந்து பசி தீர்த்தீரே!
உபதேசம் தந்து உணர்த்தினீரே! – 2
– உமக்கே

6. விண்ணகம் எதிர் நோக்கி வாழச் செய்தீர்!
விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஈந்தீர்! – 2
– உமக்கே

7. தந்தையே! இயேசுவே! தூயாவியே!
திரித்துவ தெய்வமே பணிகின்றேன்! – 2
– உமக்கே

Song Description: Tamil Christian Song Lyrics, En Piriyamae, என் பிரியமே!.
KeyWords: Christian Song Lyrics, John F. Aruldoss.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *