24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

En Karthar Seiya – என் கர்த்தர் செய்ய

என் கர்த்தர் செய்ய நினைத்தது
அது தடைபடாது
என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
தடுப்பது யாரு

என் தேவனால் நான் உயருவேன்
என் தேவனால் நான் பெருகுவேன்
நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும்

நான் கலங்கி நின்றபோது
கலங்காதே என்றாரே
நான் தனித்து நின்றபோது
நான் இருக்கிறேன் என்றாரே
கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
நான் உன்னை விட்டு விலகேன்
நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே

நான் முடியாது என்றபோது
முடியும் என்றாரே
நான் மனம் தளர்ந்த போது
திடன்கொள் என்றாரே
கர்த்தர் எந்தன் அருகில் நின்று
நான் உனக்காய் யாவும் செய்வேன்
உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே

Song Description: Tamil Christian Song Lyrics, En Karthar Seiya, என் கர்த்தர் செய்ய.
Keywords:  Christian Song Lyrics, Sam P Chelladurai, En Devanal Nan Uyaruven, Yen Karthar Seiya Tamil Christian Worship Song.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *