24/04/2025
#Devotional #Devotional Tamil

Do women’s hair stumble? – பெண்களின் முடியால் இடறலா?

#முக்காடு. 

பெண்களுக்கு கூந்தல் மற்றும் நீண்ட கூந்தல் ஒரு  சில நோக்கத்திற்கு உதவுகிறது. ஆனால் முடி உதிர்வு நம்மை பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கிடும் 
ஒரு விஷயம். ஆனால் கூந்தல்  உங்கள் மன உளைச்சல்களில் இருந்து மீட்க, நிம்மதியாக  உங்களை  வைத்திருக்க முடியும். சரி இது பெண்களுக்கு. ஆனால் ஒரு பெண்ணின் முடியில் ஒரு ஆண் உள்ளுணர்வு பாதிக்குமா? பெண்களின் 
நீண்ட கூந்தல் ஆண்களுக்குள் ஒரு ஆரம்ப, உள்ளுணர்வு பதிலைத் தூண்டுகிறது. பரிணாம ரீதியாகப் பார்த்தால், சரி.  விஷயத்திற்கு வருவோம். 
சபையில் அல்லது எங்கு எல்லாம் தேவனை  மகிமை படுத்துகிறோமோ அங்கு எல்லாம் தலையை முக்காடு இட்டு முடியயை மறைக்க  வேண்டும் என்பது நாம் அறிந்ததே. அது சிறிய பாடல் பாடுவது, வீட்டு கூட்டமானாலும் சரி. மிக மிக முக்கியமாக இன்றைய கால கட்டங்களில் சமூக வலைத்தளங்களில். 
முக்காடு இடுவது என்பது வெறுமனே தலையில் துணியால் பேருக்காக மூடாமல் நெற்றியில், காதுகளின் ஓரங்கள், கழுத்து பகுதியில் தெரியும் முடிகளை மறைத்து கொள்ளுவது ஏற்றது. 
தெய்வீக காரணங்கள் இருந்தாலும், அறிவியல் ரீதியாகவும் காரணங்கள் உள்ளன. 
பெண்களில் 
 அவளுடைய தலைமுடி 
மிகப்பெரியது, 
அடர்த்தியானது, 
நீளமானது மற்றும் 
அழகானது என்றால், 
அவளுக்குப் 
பிரதிபலிக்கும் 
மதிப்புள்ள மரபணுக்கள் உள்ளன. 
ஒரு பெண் ஆரோக்கியமாக  வளர்க்க முடிகிறது என்பது அவள் 
வீரியமுள்ளவள், 
வலிமையானவள் என்பதைக் குறிக்கிறது.
ஆண்கள் காட்சி உயிரினங்கள் என்பதால்,  பெண்களில் வியத்தகு முறையில் வெவ்வேறு சிகை அலங்காரங்கள்  போன்றவை சீக்கிரமாக மிகவும் ஈர்க்கின்றன. இப்படி பட்ட 
குணங்கள் எதிர் பாலினத்தை  ஈர்க்கக்கூடியவை. இந்த பண்புகள் 
பாலியல் திசைதிருப்பலைக் குறிக்கும் பண்புகள். 
ஆய்வு நீண்ட அல்லது நடுத்தர நீளமுள்ள கூந்தல் ஒரு வெற்றுப் பெண்ணை மிகவும் கவர்ச்சிகரமானதாகக் காட்டக்கூடும் என்றாலும், வழக்கமாக அழகாக இருக்கும் பெண்களின் கவர்ச்சியானது அவர்களின் முடி நீளத்தால் பாதிக்கப்படாது. சாதாரணமாக பெண்களின்  
 முடி நீளம்  ஒரு ஆணுக்கு  தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.எனவே விளம்பரங்கள் போன்றவற்றில் நீளமான, அலைபாயும் முடி போன்றவற்றை  ஈர்க்கும், வசீகரிக்கும் விதமாக எடுக்கிறார்கள். 
  சரி அறிவியல் ரீதியாக சரி. ஆவிக்குரிய ரீதியில் உள்ளவர்களை பாதிக்குமா?  என்றால், ஆம் ! தலை முடியில் விழுந்து போகும் அளவு பெலவீனமா என்றால். இல்லை. எல்லாரும் ஒரே விதமாய் பார்க்கும் கண்களை உடையவர்கள் இல்லை சரிதானே. 
பார்ப்பவரின் கண்ணும் முக்கியமானது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆய்வில் ,முடி இடறல் ஏற்படுத்தும் ஒரு காரணியும் கூட. 
ஆராதனையில், ஜெப வேளையில் முக்காடிட்டு நம்முடைய முடியை மறைப்பது அந்த இடத்திலோ, சபையிலோ தேவனுக்கு மட்டுமல்ல அங்கு உள்ள ஆண்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம் என்பதையும் குறிக்கும். சகோதரியே!  கர்த்தருடைய சமூகத்தில் உள்ளோருக்கு ஒரு நொடியோ, அரை நொடியோ எதற்கு நம்மால் இடறல் !நம்முடைய சகோதரர்கள் இடற நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்.முக்காடு அவசியம்.இனியும் முக்காடிட்டு முடியயை மறைப்பதும், மறைக்காமல் இருப்பதும் உங்கள் கையில்.
Sis. Meena Juliet


Description: Devotional Tamil Message By Sis. Meena Juliet, Do women’s hair stumble? – பெண்களின் முடியால் இடறலா?.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Tamil Devotional Message.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *