Continues Worship Songs – தொடர் ஆராதனை பாடல்கள்
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறேடுப்பேன்
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
வானமும் பூமியும் படைத்த
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறேடுப்பேன்
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே
உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும்
உமக்கொப்பானவர் யார்
மகிழ்வோம் மகிழ்வோம் தினமகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்த பார்தலத்தின் சொந்தக்காரரவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
முன் சென்றாரே அவர் நல்லவர்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
தேனினிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே
பாவத்தை போக்கும் பயமதை போக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்
ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே
நீரல்லால் எங்களுக்கு பரலோகில் ஜீவநாதா
நீரே அன்றி இகத்தில் வேறோறு தேற்றமில்லை பரனே
நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீரில்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
உயிரின் ஊற்றே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீயாவாய்
நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீரில்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லி துதித்திடும் நாமமது
இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உளளமெல்லாம் துள்ளுதைய்யா
உம் அன்பை பாட பாட
இதயமெல்லாம் இனிக்குதைய்யா
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
கேரூபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதியும் அந்தமுமானவரே
அல்பாவும் ஒமேகாவுமானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
பாத்திரரே துதி உமக்கே
நீரே தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
பாத்திரரே துதி உமக்கே
ஆமேன்