Boomikkoru Punitham – பூமிக்கொரு புனிதம்
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது – 2
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது – 2
எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
1. எளியோனை நேசித்த மாமன்னவர்
ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ – 2
விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ – 2
விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ – 2
இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ – 2
இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே – 3
Song Description: Tamil Christmas Song Lyrics, Boomikkoru Punitham, பூமிக்கொரு புனிதம்.
KeyWords: Alwin Thomas, Ruah Ministries, Christmas Song.