Thirupthiyakki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார்
Scale: D Major – 6/8 திருப்தியாக்கி நடத்திடுவார் தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார் பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம் ஜந்து அப்பங்களை,ஐயாயிரமாய் பெருகச்செய்தார் ஜயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் பொன்னோடும் பொருளோடும், புறப்படச் செய்தாரே பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே – ஒரு காடைகள் வரவழைத்தார் மன்னாவால் உணவளித்தார் கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார் முதிர் வயதானாலும், பசுமையாய் வாழச் செய்வார் […]