04/05/2025

En Paavangal – என் பாவங்கள்

Scale: C Minor – 4/4 என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார் இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்லுவேன் நான் திரும்பி பார்க்க மாட்டேன் என் ஆழ்கடலில் எறிந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவு கூர மாட்டார் என் நேசரைத் துதிக்கின்றேன் இனி கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே நான் புதிய படைப்பானேன் Song Description: Tamil Christian Song […]

Aasirvathiyum Karthare – ஆசீர்வதியும் கர்த்தரே

1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே – வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே […]

Aathumame En – ஆத்துமமே என்

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் ஆண்டவரைத் தொழு தேத்து இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த – உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் 1. போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும் மேலான – ஆத்துமமே 4. […]

Rojapoo Vaasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள்

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) 1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல்மணமக்கள் மீது நாம்… எல்லா மலரும் தூவிடுவோம்                                – ரோஜாப்பூ 2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க… நம் வேண்டுதலோடு […]

Mangalam Sezhikka – மங்களம் செழிக்க

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே சரணங்கள் 1. மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ 2. மங்கள மணமகன் ———–க்கும் மங்கள மணமகள்    ————க்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் 3. சங்கை […]

Manavazhvu Puvi – மணவாழ்வு புவி

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு சரணங்கள் 1. துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மனமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது – நல்ல 2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண வலங்காரா தேவகுமாரா, திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல 3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்துக் கொண்டாலது […]

Bayanthu Kartharin – பயந்து கர்த்தரின்

பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான் முயன்று உழைத்தே பலனை உண்பான் – 2 முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் – 2 எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் 2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போல மெலிவிலா நல்ல பாலகருன்பாலே – 2 மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே 3. கர்த்தருன் வீட்டைக் […]

Intha Mangalam – இந்த மங்களம்

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல் இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய் நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி நிற்க உலகத்தில் விடுத்தாய் மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன் ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன […]

Aabiragamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. செல்வி மணமகள் ————- ம் செல்வன் மணமகன்————- ம் – ஆ… என்றும் ஆசி பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி இணைந்து வாழவே! 2. கண்ணின் மணிபோல் கணவனும் இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ… என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே வாழவே! வாழவே!! வாழவே!!! இல்லறமாம் இன்ப நல்லறச் […]

Agilamengum Potrum – அகிலமெங்கும் போற்றும்

அகிலமெங்கும் போற்றும் – எங்கள் தெய்வ நாமமே சுவாசமுள்ள யாவும் துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமே மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் […]