24/04/2025
#Devotional #Devotional Tamil

Be Kind To Others – உதவி செய்யுங்கள்

நீங்கள் ஏற்கனவே ஐசுவரியாவானாக இருந்தால் கர்த்தருக்கு முன்பாக தாழ்மையாய் இருந்து, பிறருக்கு மிகுதியாய் உதவி செய்யுங்கள். மற்றவர்களை அற்பமாக எண்ணாதிருங்கள். இன்றைக்கு உங்கள் ஆத்துமா எடுக்கப்பட்டால்….

நீங்கள் ஐசுவரியாவானாக இல்லாமல் இருந்தால் தேவனுக்கு விரோதமான வழிகளில் நடந்து சீக்கிரமாக ஐசுவரியாவானாக மாற தீவிரிக்காதீர்கள் மற்றும் அப்படிப்பட்டவர்கள் மீது பொறாமை கொள்ளாமல் இருங்கள். உங்களுக்கு இருப்பதே போதும் என்று எண்ணுங்கள்.

நீங்கள் மிகவும் தரித்திரத்தில் இருந்தால் உண்மையாக உழைத்து முன்னேற பாருங்கள். மற்றவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு நீங்கள் உயர வழி பாருங்கள். உங்களையே குறைவாக எண்ணி கொள்ளாதிருங்கள். கர்த்தர் உங்களை பெருக செய்ய வல்லவராக இருக்கிறார்.

நீங்கள் யாராக இருந்தாலும் பொருளும் செல்வமும் அவர் கொடுப்பது! உங்களுடையது அல்ல. ஆகவே அதை பெற உங்களுக்கு பெலனை, ஞானத்தை கொடுத்த தேவனுக்கு உண்மையாக இருங்கள். முடிந்த மட்டும் பிறருக்கு நன்மை செய்யுங்கள். இதுவே தேவனுடைய சித்தம்!


Bro. Godson GD

Description: Devotional Tamil Message By Bro. Godson GD

Keywords: Bro. Godson GD, Devotional, Tamil Devotional Message.

Never Devalue Yourself

Are You Going The Wrong Way

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *