09/06/2025
#Aaron John #Lyrics #Tamil Lyrics

Appa Appa – அப்பா அப்பா

அப்பா அப்பா உங்க மடியில
பிள்ளையாக சாய்ந்து உறங்கணும் – 2
தேற்றிடுவீர் அணைத்திடுவீர்
அப்பா உம் அன்பினாலே – 2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காக வாழ்ந்திடுவேன் – 2
                          – அப்பா அப்பா
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நான் நடந்தாலும் ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2
கரங்களை பிடித்து துணையாய் வந்தீர் – 2
தடுமாற விடமாட்டீர் நீர்
தடுமாற விடமாட்டீர்
                          – அப்பா அப்பா
மலைபோன்ற சோதனைகள்
என்னை நெருங்கினாலும்
பனிபோல மாற்றிடும் என் இயேசுவே – 2
நான் கூப்பிடும்போது
துணையாய் வந்தீர் – 2
என் சூழ்நிலையை மாற்றிவிட்டீரே – 2
                          – அப்பா அப்பா
எதிரிகள் என்னை தாக்கினாலும்
நான் நேசிப்போர் என்னை தள்ளி விட்டாலும் – 2
பாதம் கல்லில் மோதிடாமல் – 2
கண்மணிபோல் காத்திடுவார் – 2
                          – அப்பா அப்பா
Song Description: Tamil Christian Song Lyrics, Appa Appa, அப்பா அப்பா.
Keywords: Varsha Renjith, A.J. Ministry, Aaron John, Appa Appa Unga Madiyila.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *