Anbaraam Yesuvai – அன்பராம் இயேசுவை
அன்பராம் இயேசுவைப் பார்த்துக்
கொண்டு
இன்பமாக அவர் பாதையோட
தாமே வழியும் சத்தியமும்
ஜீவனுமே!
2. துன்பப் பெருக்கிலே
சோர்ந்திடாதே
அன்பரறியாமல் வந்திடாதே
கண்விழிபோல் நான்
காத்திடுவேன் என்றனரே!
3. முட்செடி போலப் பற்றிடுமே
மோசமடையாய் நீ முற்றிலுமே
ஏங்கிடாதே நீ – நேசர் அதில்
தோன்றுவாரே!
4. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகூலம் உன்னை
விரட்டிடினும் ஆ! நேசரே தம்
இன்ப சத்தம் ஈந்திடுவார்!
5. ஈனச் சிலுவையில் ஏறிட்டாரே
உந்தனுக்காய் கஷ்டம்
பட்டிட்டாரே துன்பம்
மூலமாய் எய்திடுவாய்
இன்பக்கானான்!
6. சொந்த ஜீவனை நீ உன்னிலீந்து
அன்பில்
இணைத்தாரேவல்லமையால்
உந்தன் ஜீவனை மற்றோருக்காய்
ஈந்திடவே!
7. மாயையான ஈலோக மதில்
மாய்ந்தழியும் இம்மாந்தரன்பு
நேற்று மின்றென்றும் மாறாதவர்
நேசர்தானே!
8. வஞ்சனையான இப்பார்தலமே
வஞ்சிக்குமே உனைத் தந்திரமாய்
வாஞ்சித்திடாதே மோசமான
இப்பார்தலத்தை!
KeyWords: DGS Songs, Jesus Calls, Anbaram Yesuvai, Dhinakaran Songs, Freddy Joseph.