Aananthamaai Naamae Aarpparippomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லா கிருபை பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயா
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெரு வெள்ளமே
1. கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணி போல் என்னைக் காத்தாரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்
2. படகிலே படுத்து உறங்கினாலும்
கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்
காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மை
காப்பாரே அல்லேலூயா
3. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரமாய் முடிகிறதே
விழிப்புடன் கூடி தரித்திருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்
Arumaiyaai Yesu Namakkalitha
Alavillaa Kirubai Perithallavo
Anuthina Jeeviyathil
Aathumamae En Muzhu Ullamae
Un Arpputha Devanaye Sthothari
Pongiduthae En Ullathilae
Peranbin Peru Vellamae – Hallelujah
Pongiduthae En Ullathilae
Peranbin Peru Vellamae
Karunaiyaai Ithuvarai Kaividaamalae
Kanmani Pol Ennai Kaathaarae
Kavalaigal Pokki Kanneer Thudaithaar
Karuthudan Paadiduvom
Padagilae Paduthu Uranginaalum
Kadum Puyal Adithu Kavizhnthaalum
Kaatraiyum Kadalaiyum Amarthi Emmai
Kappaarae Hallelujah
Parisuthavaangal Paadugalellaam
Athi Seekkiramaai Mudigirathae
Vizhippudan Koodi Tharithiruppom
Virainthavar Vanthiduvaar