Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார்
– அமலாதிபன் பிறந்தார் – ஆ!
1. அன்பான பரனே!
அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!
2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் – ஆ!
3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத – பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் – ஆ!
4. கோனவர் நாட,
தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் – ஆ!
5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!
aathipan piranthaar
aathipan piranthaar – amalaathipan piranthaar – aa!
1. Anpaana paranae! arul maevung kaarananae! – nava
achchaya sachchithaa – ratchakanaakiya
uchchithavaranae! – aa!
2. Aatham pavamara, neetham niraivaera – antu
alliraavinil vellaiyatiyinil
pullannaiyir piranthaar – aa!
3. Njaaniyar thaeda vaanavar paada – mika
nannaya unnatha – pannaru maesaiyaa
innilam piranthaar – aa!
4. Konavar naada, thaanavar konndaada – entu
koththirar thoththiranj – saattidavae yootha
koththiran piranthaar – aa!
5. Vinnnudu thona, mannavar paena – aerothu
mainthanin sinthaiyalunthik kalangida
vinthaiyaayp piranthaar – aa!