24/04/2025
#Devotional #Devotional Tamil

Beloved – பிரியமானவனே

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். யோவான் 3:2
நன்றாக இந்த வசனத்தை கவனித்து பாருங்கள். “பிரியமானவனே, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருப்பதை போல உன் ஆத்துமாவும் இருக்கும்படி வேண்டுகிறேன்” என்று இல்லாமல்
“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” என்று எழுதப்பட்டு இருக்கிறது.


முதலாவது நம் ஆத்துமா சுகமாக இருக்கும்படி தான் தேவன் எதிர்பார்க்கிறார். அது நலிந்து, மெலிந்து, சுகமற்று, சுத்தமற்று இருந்து வெளிப்புறமான எல்லா சுகங்களும், வசதிகளும் நமக்கு இருந்து என்ன பயன்? தேவனுக்கு பிரதானமாக தேவையானது நம் ஆத்துமா தான், பிசாசு விழுங்க பார்க்கிறது அதே ஆத்துமா தான். நம் ஆத்துமாவை மீட்க தானே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.



ஆகவே முதலாவது, ஆத்துமா சுகமாக வாழும்படி தேவன் வாஞ்சிக்கிறார். பின்பு அதே போல நம் வாழ்க்கையின் மற்ற காரியங்களிலும் நாம் வாழ்ந்து சுகமாக (செய்கின்ற காரியங்கள் எல்லாம் ஆசீர்வாதமாக வாய்க்கும்படி!) இருக்கும்படி அவர் எதிர்பார்க்கிறார்.

எதை நாம் அதிகமாக முதன்மை படுத்துகிறோம் என்பது மிக முக்கியமானது. தேவனுக்கு பிரதானமாவைகள்,
தேவ இராஜ்ஜியம்
அவர் நீதி
வேத வாசிப்பு
ஜெப தியானம்
பரிசுத்தம்
உண்மை
அன்பு கூறுதல்
ஆவியின் கனி
ஆவியின்படி நடத்தப்படுத்தல்

என்று சொல்லி ஆத்துமாவுக்கு அடுத்த காரியங்களை தான் மிகவும் வலியுறுத்தி சொல்லுகிறதை நாம் வாசித்து இருக்கிறோம். நாம் இவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது சரீரத்துக்குரிய காரியங்கள் நிச்சயம் ஆசிர்வதிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

முதலாவது நம் ஆத்துமா சுகமாக வாழட்டும்!
Bro. Godson GD

Description: Devotional Tamil Message By Bro. Godson GD
Keywords: Bro. Godson GD, Devotional, Tamil Devotional Message.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *