24/04/2025
#Lyrics #M.K Paul #Tamil Lyrics

Itho Manusharin – இதோ மனுஷரின்

இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே

தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே

மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே

முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

Songs Description: Itho Manusharin Mathiyil, இதோ மனுஷரின் மத்தியில்.
KeyWords: Tamil Christian Song Lyrics, M.K Paul, Keerthanaigal Vol – 2. Idho Manusharin.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *