24/04/2025
#D - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Vizhukuthu Vizhukuthu Erigo – விழுகுது விழுகுது எரிகோ

Scale: D Major – 2/4
விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம்

யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தைச் சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம்

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடாமல் பின் தொடர்வோம்

அச்சமின்றி துணிந்து செல்வோமே
அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோம்

தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்

Song Description: Tamil Christian Song Lyrics, Vizhukuthu Vizhukuthu Erigo, விழுகுது விழுகுது எரிகோ.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, jebathotta jeyageethangal songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, vizukuthu vizukuthu eriko songs, vizukuthu vizukuthu eriko songs lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *