Aanantha Thuthi Oli – ஆனந்த துதி ஒலி
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் – ஆ… ஆ…
1. மகிமைப் படுத்துவே னென்றாரே
மகிபனின் பாவம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு – ஆ (2)
2. ஆதிநிலை ஏகிடுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோமே
பாழான மண் மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும்
3. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாகத் தேவன் அருள்வார்
4. ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அனாதி தேவனே அடைக்கலம் பாரினில்
அனாதையாவதே இல்லை
5. பார்போற்றும் தேவன் நம் தேவன்
பாரினில் வேறில்லை பாக்கியம்
நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே
வேறென்ன வாழ்வினில் வேண்டும்
பிள்ளைகளும் சபையும்
பிதாமுன்னே நிலைக்கும்
பரிசுத்த மாளிகை எழும்பும்
KeyWords: Christian Song Lyrics, Theophilus William, Tamil Song Lyrics.