24/04/2025
#Lyrics #Reenu Kumar #Tamil Lyrics

Yesu En Pakkathil – இயேசு என் பக்கத்தில்

இயேசு என் பக்கத்தில்
நேசர் என் பக்கத்தில்
நாளை குறித்த கவலை இல்லை
எதை குறித்த பயமும் இல்லை

என்னோடிருப்பேன் என்று
சொன்ன தேவன் அவர்
என்னை கைவிடாமல் இம்மட்டும்
காக்கும் தேவன் அவர் – 2

இம்மானுவேல் என் பக்கத்தில்
எபினேசர் என் பக்கத்தில்
தனிமை என் வாழ்வில் இல்லை
குறைவும் என் வாழ்வில் இல்லை
                                       – என் இயேசு

எனனை அழைத்த தேவன்
என்றும் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்றும் தேவன் அவர் – 2
உன்னதர் என் பக்கத்தில்
உத்தமர் என் பக்கத்தில்
தோல்வி எனக்கு இல்லையே
ஏமாற்றம் என்றும் இல்லையே
                                       – என் இயேசு

அவர் தழும்புகளாலே என்னை
குணமாக்குகின்றவர்
என் கால்களை அவர் கரங்களினால்
தாங்கும் தேவன் அவர் – 2
எல்ஷடாய் என் பக்கத்தில்
எல் ரோயீ என் பக்கத்தில்
கண்கள் கலங்குவது இல்லை
என் இதயம் கலங்குவது இல்லை
                                       – என் இயேசு

இரட்சகர் என் பக்கத்தில்
கன்மலை என் பக்கத்தில்
பரிசுத்தர் என் பக்கத்தில்
பரிகாரி என் பக்கத்தில்
துருகம் என் பக்கத்தில்
கேடகம் என் பக்கத்தில்
என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்

Song Description: Tamil Christian Song Lyrics, Yesu En Pakkathil, இயேசு என் பக்கத்தில்.
Keywords: Reenu Kumar, K1, Rock Eternal Ministries, Kanmalai – 1, Yesu Yen Pakkatthil.




Leave a comment

Your email address will not be published. Required fields are marked *